நாட்டை விட்டு வெளியேற முயன்ற நடிகை... விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய போலீஸ்...!!

நாட்டை விட்டு வெளியேற முயன்ற நடிகை...  விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய போலீஸ்...!!

மிஸ்ஸஸ் சீரியல் கில்லர், ட்ரைவ், பூட் போலீஸ் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஜாக்குலின் பெர்னான்டெஸ். இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜாக்குலின் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வருகிறார். அவரது நடிப்பில் பல படங்கள் வெளிவர தயார் நிலையிலும் இருக்கின்றது. இந்நிலையில் பிஸிமிக்க நடிகையாக வலம்வந்த ஜாக்குலின் பெர்னான்டெஸ் 200 கோடி மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். இதன் அடிப்படையில் துபாய் செல்வதற்காக மும்பை விமானநிலையம் சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் செய்த மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் சிக்கி உள்ளார். ஆனால் ஜாக்குலின் தனக்கும் மோசடி மன்னன் சுகேசுக்கும் எந்த தொடர்புமில்லை என்று தொடர்ச்சியாக மறுத்துவருகிறார். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பாலின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமலாக்க துறையினர் சுகேஷ் சந்திரசேகரின் மீது 7000 பக்க குற்றவியல் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றவியல் பத்திரிக்கையின் அடிப்படையில் பல கோடி மதிப்பிலான பொருட்களை சுகேஷ் சந்திரசேகர்  ஜாக்குலின் பெர்னான்டெஸுக்கு வழங்கியுள்ளார் என்பது வெளிப்படையாக தெரியவருகிறது. மேலும் சுகேஷ் சந்திரசேகரின் மோசடி பண பரிவர்த்தனைக்கு ஜாக்குலின் பெர்னான்டெசும் உடந்தையாக இருந்தது தெரிய வருகிறது .

நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் 10 கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கி உள்ளதை போலீசார் ஆதாரத்துடன் கண்டு பிடித்துள்ளனர். அதில், 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குதிரை மற்றும் 4 பூனைகள் அடக்கம். அந்த பாரசீக நாட்டு பூனைகளின் விலை மட்டும் தலா 8 லட்சம் மதிப்புடையதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் சில பாலிவுட் நடிகைகளுக்கும் தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com