அப்படி சொன்னதுக்கு என்னை மன்னிச்சிடுங்க...! கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக்..!!

கிரிக்கெட் பேட்டை பக்கத்து வீட்டுக்காரர்களின் மனைவிகளுடன் ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அப்படி சொன்னதுக்கு என்னை மன்னிச்சிடுங்க...!  கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக்..!!

கிரிக்கெட் பேட்டை பக்கத்து வீட்டுக்காரர்களின் மனைவிகளுடன் ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக். ஐ.பி.எல். ஆட்டங்களில் பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். தற்போது கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார். இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்திய மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் போட்டி வர்ணணையாளராக தனது புதிய பணியையும் தொடங்கினார்.  அப்போது, தினேஷ் கார்த்திக் “ எந்த பேட்ஸ்மேன்களுக்கும் தாங்கள் வைத்திருக்கும் மட்டைகள் பிடிப்பதில்லை.. அடுத்த வீரர்கள் வைத்திருக்கும் மட்டைகளைதான் பெரிதும் விரும்புகிறார்கள். கிரிக்கெட் மட்டைகள் பக்கத்து வீட்டுக்காரர்களின் மனைவிபோல. நம்மிடம் இருப்பதை விட, இன்னொன்று சிறந்தது அழகானது என்று நினைக்கிறார்கள். எப்போதும் நம்மிடம் இருப்பதை விட இன்னொன்றுதான் சிறந்தது என்று நினைக்கிறோம் என்றார். இந்த கருத்திற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் பதியப்பட்டன.

இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையே மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வர்ணணையாளராக பணியாற்றிய தினேஷ் கார்த்திக், கடந்த போட்டியில் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com