கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட்! பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட்! பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 5வது வாரமாக நடைபெறும் ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சியில் பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பரபரப்பாக இந்தியா இயங்கி வரும் ஸ்மார் சிட்டிகளில் மக்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக  ஹேப்பி ஸ்டிரீட் ஒவ்வொரு ஆண்டும் கோடை ஞாயிறுகளில் கொண்டாடப்படுகிறது. கோவை மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து வாரம் தோறும் ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. ரேஸ் கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் ஹேப்பி ஸ்டிரீட்  நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மூன்றாவது வாரமாக ஆர்.எஸ்.புரம் பகுதியி ல்ஹேப்பி ஸ்டிரீட்  நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர். மேலும் ஆடல்  பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இதில் கலந்து கொண்ட சிலர்  சிலர் சிலம்பம், சைக்கிள் சாகசம் போன்ற தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com