கமல்ஹாசன் 234 - பட புஜை வீடியோ இணையத்தில் வைரல்..!

கமல்ஹாசன் 234 -  பட புஜை  வீடியோ இணையத்தில் வைரல்..!

கமல்ஹாசனின் 234 வது படத்தின் பூஜை தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் கழித்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒன்று சேர்ந்து பணியாற்றவுள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட், மெட்ராஸ் டாக்கிஸ் மூன்று நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்தின் அப்டேட் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் பணியாற்றக் கூடிய டெக்னீஷியன்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com