தி லெஜெண்ட் திரைப்படத்தின் கேரள செய்தியாளர் சந்திப்பு...!

தி லெஜெண்ட் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், கேரள செய்தியாளர் சந்திப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
தி லெஜெண்ட் திரைப்படத்தின்  கேரள செய்தியாளர் சந்திப்பு...!

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த தி லெஜெண்ட் சரவணன் தற்போது தி லெஜெண்ட் படத்தில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்து சினிமாத்துறையில் கால் பதித்துள்ளார். தி லெஜெண்ட் ப்ரோடுக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேடி & ஜெர்ரி இந்த படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தில் தி லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரௌட்டலா நடித்துள்ளார். மேலும் படத்தில், பிரபு, விவேக்,மயில்சாமி, நாசர், தம்பி ராமைய்யா, சுமன், ராய் லட்சுமி, ரோபோ சங்கர் என பெரிய நட்சத்த்திர பட்டாளமே நடித்துள்ளனர்.  படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர். மேலும் படத்தில் இருந்து மொசலோ மொசலு பாடலும், வாடி வாசல் பாடலும், போ போ போ பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தி லெஜெண்ட் என்ற பெயரிலும், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் டாக்டர் எஸ். தி லெஜெண்ட் என்ற பெயரிலும் பிரம்மாண்டமாக ஜூலை 28ம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. மேலும் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தி லெஜெண்ட் சரவெடி என்ற தலைப்பில் படத்தின் புது ட்ரைலர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தியில் வெளியான நிலையில், தி லெஜெண்ட் படத்தின் புது கன்னட ட்ரைலர் நேற்று வெளியானது.  இது கன்னட ரசிகர்களிடையே நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது. 

இந்நிலையில், தற்போது தி லெஜெண்ட் படத்தின் கேரளா செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. செண்டை மேளம் முழங்க பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில், தி லெஜெண்ட் சரவணன், ஊர்வஷி ரௌட்டலா, ராய் லக்ஷ்மி, இயக்குனர் ஜேடி & ஜெர்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் ரசிகர்கள் படத்திற்காக காத்திருப்பதாகவும், தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com