பெட்ரூம் காட்சியில் தர்ஷன் லாஸ்லியா... கவினை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்.. வைரல் மீம்ஸ்

லாஸ்லியாவின் பழைய காதலரான கவினுடன் சேர்த்து வைத்து மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர்.
பெட்ரூம் காட்சியில் தர்ஷன் லாஸ்லியா... கவினை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்.. வைரல் மீம்ஸ்

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் நிறைய வரவேற்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷன், பிக் பாஸ் முகேன், லாஸ்லியா, கவின் என அனைவருமே தற்போது சினிமாவில் தடம் பதிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா.

பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் ஜோடிகளாக வலம் வந்த இருவரும் வெளியில் வந்த பிறகு அவர் அவரவர்கள் வழியை பார்த்து சென்றுவிட்டனர். அதே போன்று அந்த நிகழ்ச்சியில் அண்ணன், தங்கையாக வலம் வந்தவர்கள் லாஸ்லியா, தர்ஷன். அதைத்தொடர்ந்து லாஸ்லியா பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் கூகுள் குட்டப்பா.

கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் லாஸ்லியாவுக்கு ஜோடியாக தர்ஷன் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா டீசரில் இருவரும் பெட்ரூம் காட்சியில் நடித்திருந்தனர்.

இதை தான் நெட்டிசன்கள் இணையத்தில் வெச்சு செய்து வருகின்றன. லாஸ்லியாவின் பழைய காதலரான கவினுடன் சேர்த்து வைத்து மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர். இந்த மீம்ஸ்கள் தான் இணையத்தில் ட்ரெண்டில் உள்ளது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com