விடுதலை பார்ட் -2 அக்டோபர் வெளிவரும் - நடிகர் கொடுத்த அப்டேட்

விடுதலை பார்ட் -2 அக்டோபர் வெளிவரும் -  நடிகர் கொடுத்த அப்டேட்

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவில் மக்கள் நீதி மையத்தில் திருப்பூர் தொகுதி வேட்பாளரும் தனியார் கல்லூரி நிறுவனத்தின் இயக்குனரன அனுஷா ரவி நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய சூரி வெண்ணிலா கபடி குழுவில் பெரும் 13 புரோட்டா மட்டுமே சாப்பிட்டேன் டைரக்டர் சிறப்பாக அந்த காட்சி அமைய வேண்டும் என்பதற்காக 13 புரோட்டாக்கள் மட்டுமே சாப்பிட சொன்னார், பெண்கள் மீது கைவைத்து நடித்த பழக்கமே இல்லை பவானி மேல் கை வைக்கும் அந்த காட்சி வரும் பொழுது 12 தடவைகளுக்கு மேல் அந்த காட்சியானது எடுக்கப்பட்டது படத்தில் கதைக்கு ஒத்து வந்தால் ரொமான்ஸ் செய்ய தயாராக இருக்கிறேன்.

எல்லா நடிகர்களும் எனக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு இரவு 11 மணிக்கு போன் செய்து எனக்கு வாழ்த்து சொன்ன தருணம் மறக்க முடியாத ஒன்று என் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சூப்பர் ஸ்டார் வாழ்த்து செய்ததை கண்டு மகிழ்ந்தோம் படத்தில் குமரேசனாக வாழ்ந்திருக்கிறீர்கள் படம் முழுவதும் அதுதான் வெளிப்பட்டுள்ளது உங்கள் வளர்ச்சிக்கு கடவுள் துணை நிற்பார் கடவுள் அனைத்தையும் கொடுப்பார் விடுதலை பார்ட் -2 அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் சூரி நடனம் செய்தால் யாராலும் பார்க்க முடியாது.

அஜித் படத்தில் நடித்த பின்பு தான் எனக்கு வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது அஜித் சார் என்னிடம் பேசும் போது யார் எது சொன்னாலும் மற்றவர்கள் குறித்து கவலை கொள்ள வேண்டாம் உங்களை நீங்கள் மதிக்க வேண்டும் மாணவர்களுக்கு எது சரியென படுகிறதோ அதனை மாணவர்கள் செய்ய வேண்டும் எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும் என பேசினார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com