ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சூர்யா-கமல் படங்கள் மோதல்..!

சூர்யா படத்தால் தள்ளிப்போகும் கமல் படம்..!
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சூர்யா-கமல் படங்கள் மோதல்..!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் எதற்கும் துணிந்தவன். முதன்முறையாக முழு நீள ஆக்சன் படமாக இந்தப் படம் உருவாகி வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகல் ஃபாசித் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் அதே காரைக்குடி பகுதியை தான் லோகேஷ் கனகாராஜும் தேர்ந்தெடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால், ஒரே நேரத்தில் இரு பெரும் நடிகர்களின் படப்பிடிப்பை ஒரே இடத்தில் நடத்த அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என தெரிகிறது. எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்கள் இருப்பதால், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது. ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகி போட்டிப்போடுவதை கண்டிருக்கிறோம். இப்போது படப்பிடிப்பிற்கே ஹீரோக்களுக்கு இடையில் போட்டி ஏற்படும் நிலை ஏற்பட்டிருப்பது புதிதாக உள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com