சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" படத்தின் டீசர் தேதி அறிவிப்பு

சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன்-எண்டர்டெய்னர்  படம்
சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" படத்தின் டீசர் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டியராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க, ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், சத்யராஜ், ஜெயபிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பலர் இப்படத்தின் திடமான நட்சத்திரக் குழுவில் உள்ளனர்.

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 18 மாலை 6 மணிக்கு வெளியாகிறது என  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com