’’பொண்ணுங்கனாலே பலவீனமுன்னு நினைச்சுட்டு இருக்காங்க; அப்படி இல்லன்னு காட்டனும்’’ : வெளியானது எதற்கும் துணிந்தவன் டிரைலர்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
’’பொண்ணுங்கனாலே பலவீனமுன்னு நினைச்சுட்டு இருக்காங்க; அப்படி இல்லன்னு காட்டனும்’’ : வெளியானது எதற்கும் துணிந்தவன் டிரைலர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான்  'எதற்கும் துணிந்தவன்'.  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம் வருகிற மார்ச் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்தியராஜ், சூரி, புகழ், சரண்யா பொன்வண்ணன், தேவ தர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசர், அதிரடி சண்டைக் காட்சிகளுடன் வெளியானதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் படத்தின் டிரைலரை சூர்யாவின் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com