யாரா இருந்தாலும் காசு கொடுத்தா தான் தீனி!!!- பாகம் 1 தானா? எத்தனை பாகங்கள் இன்னும் இருக்கிறதோ?

சிலம்பரசன் நடிப்பில் உருவான வெந்து தனிதது காடு படத்தின் ட்ரெயிலர் வெளியானது. பாகம் இன்று எனக் கூறப்பட்டதால், ரசிகர்கள் உற்சாகம்.
யாரா இருந்தாலும் காசு கொடுத்தா தான் தீனி!!!- பாகம் 1 தானா? எத்தனை பாகங்கள் இன்னும் இருக்கிறதோ?

பல ஆண்டுகளுக்கு பிறகு, காதல் படங்களுக்கான இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் காதல் நடிகரான சிலம்பரசன் இணைந்த புதிய படம் தான் வெந்து தணிந்தது காடு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உர்வாகி இருக்கும் இந்த படமானது, வருகிற செப்டம்பர் 15ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

ஐசரி கணேஷ்-இன் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி மற்றும், மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என்ற படங்களுக்கு அடுத்து, கௌதம் வாசுவ்தேவ் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சிலம்பரசன் இணையும் இந்த படத்திற்காக, பல கோடி ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கும் நிலையில், படத்தின் ட்ரெயிலர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

படத்தின் டீசரும், முதல் சிங்கிள் பாடலும் சமீபத்தில் வெளியாகி பலரது வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் இரண்டாவது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான மறக்குமா நெஞ்சம் பாடலும், அனைவரது உள்ளத்தையும் கவரும் வகையில், படத்தின் கதாநாயகனின் கதையை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் வெளியான அந்த பாடல், மிகவும் அழகான ஒரு சிறிய சோகத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் வரும் இந்த படத்தின் ட்ரெயிலர், மிகவும் வித்தியாசமாக கௌதம் மேனனின் பிரத்யேக ஆங்கில வசனங்களுடன் தொடர்கிறது. ஆனால், 80களில் நடப்பது போல காட்சியமைப்புகள் இருப்பதை அடுத்து, தமிழ் காரராக நடித்திருக்கிறார் சிம்பு. அதில், இசக்கி பரோட்டா கடை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல தனியார் உணவு நிறுவனமான ‘ஜூனியர் குப்பண்ணா’வுடன் இணைந்து, தற்போது பிரத்யேகமாக இசக்கி பரோட்டா என்ற உணவு வெளியாக இருப்பதாக நேற்று, தயாரிப்பு நிறுவனமான ‘வேல்ஸ்’ எண்டெர்டெயின்மெண்ட் தெரிவித்த நிலையில், அதற்கான அர்த்தம் ட்ரெயிலர் மூலமாக மட்டுமே விளங்குகிறது.

இந்த ட்ரெயிலரின் முக்கிய அம்சமே, கௌதமின் சிறப்பான ரயில் காட்சிகள் தான். அதுமட்டுமின்றி, கதாநாயகன் சிம்புவிற்கு ஒரு விரல் இல்லை என்பதும் முதல் காட்சியிலேயே காட்டப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண மனிதன் எப்படி டான் ஆகிறான் என்பதை போலவே இந்த கதை அமைந்துள்ளது என ட்ரெயிலரின் மூலமாகவே தெரிகிறது. அதற்கும் மேலாக, மும்பைக்கு சென்று வேலையில் சேரும் சிம்பு, இந்தியிலேயே, ‘செத்து போடா’ எனக் கூறுவதில் முடிகிறது ட்ரெயிலர்.

ஆனால், அதில் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியே, படத்தின் ட்ரெயிலர் இறுதியில், பார்ட் 1, The kindling, அதாவது, தூண்டுதல் என்பதைக் குறிப்பதால், படம் பல பாகங்களாக உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. இன்று வேல்ஸ் கல்லூரியில் நடக்கும் படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு, ஹெலிகாப்டரில் வருகைத் தந்திருக்கிறார் சிலம்பரசன். அதன் வீடியோவை தற்போது பார்த்து மகிழுங்கள்.

\வருகிற செப்டம்பர் 15ம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு, மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இரவு 9 மணி அளவில் வெளியான இந்த ட்ரெயிலர், சிறிது நேரத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்றது. மேலும், இதன் வெளியீட்டு விழாவில், எ.ஆர்.ரஹ்மானின் நேரலை இசை நிகழ்ச்சி நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com