உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!

உலகிலேயே மிக பெரிய இந்து கோயில் அமெரிக்காவில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.

அட்லாண்டிக் கடற்பகுதியிலிருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு மாநிலம் நியூ ஜெர்சி சுமார் 183 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.  

இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில், வரும் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் திருப்பணியில் 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com