கையூட்டை கண்டித்து கல் குவாரிகள் வேலை நிறுத்தம் ; ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு..!

கையூட்டை கண்டித்து   கல் குவாரிகள் வேலை நிறுத்தம் ; ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு..!

தேனி மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் சங்கம் சார்பாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 3 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அதிகாரிகள் மிரட்டுவதாகவும், தமிழக அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கும் விதிமுறைகளை, சிறிய அளவிலான கல்குவாரிகள் நடத்துபவர்களுக்கும் விதிக்கப்படுவதாகவும் கூறி, இதனைக் கண்டித்து  தமிழக கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். 

இதனையடுத்து,  தேனி மாவட்டத்தில் செயல்படும் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர்கள் மூடப்பட்டது. அனைத்து கல்குவாரிகளும், கிரஷர்களும் மூடப்பட்டதால் தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் தினமும் 3 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர கல்குவாரிகளை நம்பி பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளதால் தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக நடைபெறும் கட்டுமான தொழிலும் அடியோடு பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் அர-சு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்குவாரிகள் கிரஷர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com