11 நாட்களில் 3-வது முறையாக… இந்தியாவின் புதிய சாதனை!

இந்தியாவில்  கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

11 நாட்களில் 3-வது முறையாக… இந்தியாவின் புதிய சாதனை!

இந்தியாவில்  கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. முன்களப் பணியாளர்கள், முதியோர் எனப் படிப்படியாக செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 69  கோடியே 68 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மட்டும் சுமார் ஒரு கோடியே 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 11 நாட்களில் மூன்றாவது முறையாக, ஒரே நாளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி மிகச்சிறந்த நாள் என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.