காலாவதியான மருந்து சாப்பிட்டு 3 குழந்தைகள் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உத்தரபிரதேசத்தில், காலாவதியான மருந்து சாப்பிட்டு 3 குழந்தைகள் உள்பட 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அண்மைக்காலமாக மர்ம காய்ச்சலுடன், டெங்கும் பரவி வருகிறது. மர்ம காய்ச்சல் பரவலை தொடர்ந்து, அரசு சார்பில் ஆங்காங்கு கிராமங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அங்கு குழந்தைக்கு காலாவதியான க்ளுக்கோஸ் செலுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அம்ரி கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த முகாமில் காய்ச்சலுடன் வந்த 200 பேருக்கு காலவதியான மருந்துகள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை சாப்பிட்ட 3 சிறுவர்கள் வாந்தியால் அவதிப்பட்டதாகவும்,  கர்ப்பிணி ஒருவர் மோசமான உடல்நிலையுடன் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மாவட்ட அளவில் துறை ரீதியிலான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.