இன்று நாட்டின் 74-வது குடியரசு தினம்...!கடமைப் பாதையில் கோலாகல கொண்டாட்டம்...!

இன்று நாட்டின் 74-வது குடியரசு தினம்...!கடமைப் பாதையில் கோலாகல கொண்டாட்டம்...!

குடியரசு தின கொண்டாட்டத்தை யொட்டி டெல்லி கடமைப் பாதையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

நாட்டின் 74-வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியில் கடமைப் பாதையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மூவர்ண கொடியேற்றுகிறார். குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பின், கொடியேற்றும் முதல் குடியரசு தினம் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 

இதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க கடமைப் பாதையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படையினரின் அணி வகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ஏற்று கொள்கிறார். காலை 10.30 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு குடியரசு தின விழா நிறைவடைகிறது. 

முன்னதாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதிநவீன டிரோன்கள், ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப் படை சாகசம் நடைபெற உள்ளது. கலாசாரம், பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம் பெறுகின்றன. குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com