பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் இல்லை - ஐ.சி.எம்.ஆர். தலைவர் கருத்து

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் அவசியத்தை நிரூபிக்க, இதுவரை அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை என, ஐ.சி.எம்.ஆர். தலைவர் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் இல்லை - ஐ.சி.எம்.ஆர். தலைவர் கருத்து

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் அவசியத்தை நிரூபிக்க, இதுவரை அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை என, ஐ.சி.எம்.ஆர். தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான கூடுதல் நோய் எதிர்ப்பு சக்திக்காக, 3-வது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள, சில நாடுகள் அனுமதி அளித்துள்ளன.

இந்தியாவிலும் ஒரு சாரார் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கூறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி டோஸ் தேவை என்பதை நிரூபிக்க இதுவரை அறிவியல் ஆதாரம் எதுவும் வெளியாகவில்லை என கூறியுள்ளார்.

மேலும், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத்தான் தற்போதைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com