இந்து மத உணர்வுகளை இழிவு படுத்தியதாக அமைச்சர் உதயநிதி மீது புகார்!

இந்து மத உணர்வுகளை இழிவு படுத்தியதாக அமைச்சர் உதயநிதி மீது புகார்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, இந்து மத உணர்வுகளை புன்படுத்தும் வகையிலும், இழிவு படுத்தும் வகையில் பேசியதாக கூறி, டெல்லி காவல் நிலையத்தில் புகார்.

சனாதன தா்மத்தை ஒழிக்கும் தீா்மானம் குறையாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவரது ட்விட்டா் பதிவில், காவிகளின் மிரட்டல்களுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது என தொிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவது போல், பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம் தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லியில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம் தான் காரணம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜின்டால் என்பவர் டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

இந்து மத உணர்வுகளை புன்படுத்தும் வகையிலும், இழிவு படுத்தும் வகையில் அவரது பேச்சு இருந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அமைச்சர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க || ”சனாதன தா்மத்தை ஒழிக்கும் தீா்மானம் கொஞ்சமும் குறையாது” - உதயநிதி ஸ்டாலின்