ஜார்க்கண்டில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

ஜார்க்கண்டில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜார்க்கண்டில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுவதால், வரும் 16ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அங்கு ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இந்த கொரோனா பேரிடர் காலத்தில், ஏற்கனவே சி.பி.எஸ். இ. தேர்வுகளை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கொரோனா தொற்று உயர்வின் காரணமாக ஜார்க்கண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.