கடந்த 24 மணிநேரத்தில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று…

நாடு முழுவதும் தினசரி தொற்று பாதிப்பு 43 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கேரளாவில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று…

நாடு முழுவதும் தினசரி தொற்று பாதிப்பு 43 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் கேரளாவில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் 30ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 614 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் கேரளாவில் 181 பேர் உட்பட நாடு முழுவதும் 338 பேர் தீவிர தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதேபோல் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரத்து 567 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். நேற்று மட்டும் நாடு முழுவதும் 86 லட்சத்து 51 ஆயிரத்து 701 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் தற்போது வரை தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மொத்த எண்ணிக்கை 71 கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது.