திருப்பதி லட்டு வழங்குவதில் பழங்கால முறையை பின்பற்றப்போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதம் பக்தர்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், இனி பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க : தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ் ரயில்...மகிழ்ச்சியில் பயணிகள்...!
இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும், கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.