தேர்தலில் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவிப்பு...

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம் முஷாபர்நகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வரும் தேர்தலில் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட போவதாகத் தெரிவித்துள்ளனர்

தேர்தலில் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவிப்பு...

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 9 மாதங்களாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூரில் சக்யுக்த் கிசான் மோச்சா என்ற பெயரில் 40 விவசாய சங்கங்கள் இணைந்து கிசான் மகாபஞ்சாயத்து என்ற மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற பொதுக்கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும், நாட்டை தனியாருக்கு விற்பனை செய்வதில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என மகா பஞ்சாயத்து ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் திகைத் கூறியுள்ளார். 

மேலும் செப்டம்பர் 27ம் தேதி நாடு தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த  போராட்டத்திற்கு பாஜக எம்பி வருண் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.