முதியவர்களுக்கு இலவச பஸ் பயணம்!!! மகாராஷ்டிராவில் புதிய திட்டம்!!!

மகாராஷ்டிராவில், மூத்த குடிமக்களுக்கு, இலவச பேருண்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்ல வரவேற்புக் கொடுத்துள்ளனர்.

முதியவர்களுக்கு இலவச பஸ் பயணம்!!! மகாராஷ்டிராவில் புதிய திட்டம்!!!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை வழங்கியது பல மாநிலங்களுக்கு யூனியன் பிரதேசங்களுக்கு பெரிதாக ஊக்கப்படுத்தியுள்ளது. மேலும், சமீபத்தில் நடந்து வரும் இலவசங்கள் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, பாஜக, பலரை குற்றம் சாட்டி வர, தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு இலவசத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

75 வயது தாண்டிய முதியவர்களுக்கு, அரசு பேருந்துகளில் இலவச பயணம் என அறிவித்துள்ளது. மேலும், பஸ் பாஸ் கட்டணம் செலுத்தியவர்களுக்கும் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு, மகராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகிய இருவரால் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இந்த சேவையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்:

இலவச கட்டணத்டிற்கு தகுதியானவராக இருக்க 75 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதனை நிரூபிக்க ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவர் லைசன்ஸ், வோட்டர் ஐடி போன்றவை நடத்துனர்களிடம் காட்ட வேண்டும்.

இந்த சேவை, MSRTC-இன் நகர பேருதுகளில் வழங்கப்படவில்லை. மேலும், இந்த வசதி, மாநிலத்தின் எல்லைகளுக்குள் அடங்கும்.

MSRTC-யால் இயக்கப்படும் பேருந்து சேவைகளில், குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும், 65 முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்கள், 50 சதவீதம் தள்ளுபடி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

75வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் விதத்தில், ஆசாதி கா மஹோத்சவ்-இன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.