”கோ பேக் கெஜ்ரிவால்” பதாகைகள்... ஆளும் கட்சியினரின் அட்டூழியத்தால் பரபரப்பு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பஞ்சாப் மாநிலத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கோ பேக் கெஜ்ரிவால் பதாகைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சி நிச்சயம் போட்டியிடும் என டெல்லி முதல்வரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பஞ்சாப் செல்ல உள்ளார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆளும் காங்கிரஸ் கட்சியினர், இதனை வெளிப்படுத்தும் விதமாக ”கோ பேக் கெஜ்ரிவால்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அமிர்தசரஸ் பகுதியில் ஆங்காங்கே வைத்துள்ளனர்.