ஜம்மு-காஷ்மீருக்கு முழு அந்தஸ்து வழங்க வேண்டும் ... பா.சிதம்பரம்

ஜம்மு-காஷ்மீருக்கான முழு அந்தஸ்தையும் மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு முழு அந்தஸ்து வழங்க வேண்டும் ... பா.சிதம்பரம்

இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டிருந்த அவர், ஜம்மு-காஷ்மீர் ஒரு ரியல் எஸ்டேட் நிலம் அல்ல, மாறாக அது ஒப்பந்தம் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஒரு மாநிலம் என தெரிவித்துள்ளார்.

எனவே ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரவேண்டும், அதுவே காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கான முதல் நடவடிக்கையாக இருக்கும் என கூறியுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">In the monsoon session, Parliament should repeal the offending laws and restore the status quo ante in J&amp;K<br><br>That is the only way to draw the starting line for a political resolution of the Kashmir issue</p>&mdash; P. Chidambaram (@PChidambaram_IN) <a href="https://twitter. com/PChidambaram_IN/status/1406802318851334144?ref_src=twsrc%5Etfw">June 21, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>