மழைக்கால கூட்டத்தொடர்: வரும் 19-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு - பிரகலாத் ஜோஷி

மழைக்கால கூட்டத்தொடர்:   வரும் 19-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு - பிரகலாத் ஜோஷி

வரும் 19-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். 

வரும் 19-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் திறந்து வைத்தார். உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வரும் 20-ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடர், ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், பொது சிவில் சட்ட மசோதா, டெல்லி அவசர சட்டம் குறித்த மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க    | பேனா நினைவுச் சின்னம் வழக்கு : தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்...!