4ஜியை விட 10 மடங்கு அதிவேகம் கொண்ட 5ஜி...அறிமுகம் செய்து வைத்த பிரதமர்...மக்கள் பயன்பாட்டிற்கு எப்போ?

4ஜியை விட 10 மடங்கு அதிவேகம் கொண்ட 5ஜி...அறிமுகம் செய்து வைத்த பிரதமர்...மக்கள் பயன்பாட்டிற்கு எப்போ?

டெல்லியில், அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார். 

5ஜி அலைகற்றை சேவை:

அண்மையில் மத்திய தொலைத்தொடர்பு நிறுவனம்  5ஜி அலைக்கற்றை சேவையை அறிமுகம் செய்து வைத்தது. இதனை வாங்க ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் போட்டா போட்டியிட்ட நிலையில், இறுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டன. இதில் தீபாவளியை ஒட்டி 4 பெரு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்தது.

5ஜி சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி:

இந்த நிலையில் டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறவுள்ள 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில்,  5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இருப்பினும் ரிலையன்ஸ்  ஜியோ அறிவித்தபடி, இந்த சேவையை தீபாவளிக்கு பிறகே ஒவ்வொரு கட்டமாக மாநகரங்களில் மக்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த 5ஜி தொலை தொடர்பு உபகரணங்களை பார்வையிட்ட மோடி, அதுபற்றிய விவரங்களையும், அதன் பயன்பாட்டையும் கேட்டறிந்தார். இதனிடையே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5ஜி சேவை, 4ஜியை விட 10 மடங்கு அதிவேகம் கொண்டது என சொல்லப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com