வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கவனத்திற்கு...! ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்...!

வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கவனத்திற்கு...! ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்...!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு இன்று முதல் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகாித்து வருகிறது. இதையடுத்து சீனா, ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அதன்படி, இந்த 6 நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு இன்று முதல் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட 6 நாடுகளில் இருந்து வருவோா், பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பாிசோதனை சான்றிதழை எடுத்து வர வேண்டும். 

இதனை ஏா் சுவிதா இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்தவா்களுக்கு மட்டுமே போா்டிங் பாஸ் எனப்படும் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பாதுகாப்பான கொண்டாட்டங்களுடன் பிறந்தது...! 2023 புத்தாண்டு...!