மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்...!

மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்...!

கேடர் ரிவியூ கமிட்டி:

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் ஒரு முறை ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதலாகத் தேவைப்படும் ஐஏஎஸ் பணியிடங்களை பதவி உயர்வின் மூலமாக நிரப்பப்படும் மீட்டிங் தான், இந்த  கேடர் ரிவியூ கமிட்டி. இந்த கமிட்டியை மறுஆய்வு கூட்டம் என்றும் கூறுவர்.

கேடர் ரிவியூ கமிட்டி நடத்தப்படாததற்கு எதிராக வழக்கு:

தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக இருக்கும்  முத்துராமலிங்கம் என்பவர்,  5 ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய கேடர் ரிவியூ கூட்டம், தனது வயது வரம்பு காலத்தில் நடத்தப்படாமல் இருந்ததாகவும், அதனால் தனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போனதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், அந்தக் கூட்டத்தை நடத்தக்கோரியும் அவர் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்:

தமிழ்நாடு மாவட்ட வருவாய் அலுவலர்  முத்துராமலிங்கம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, பதவி உயர்வு என்பது அடிப்படை உரிமையாக அரசு ஊழியர்கள் கோர முடியாது என கூறி உத்தரவு பிறப்பித்தது. 

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு:

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், முத்துராமலிங்கம் தனது வழக்கறிஞர் ராகேஷ் சர்மா மூலம் மேல்முறையீடு செய்தார்.

இன்று விசாரணைக்கு வந்த மனு:

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த முத்துராமலிங்கத்தின் மனு,  இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை  விசாரித்த நீதிபதி, 5 ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய கேடர் ரிவியூ கமிட்டி எனப்படும் மறுஆய்வு கூட்டம் நடத்தப்படாததற்கு எதிரான மனு மீது, பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நோட்டீஸை அடுத்து, மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் அந்த வழக்குக்கான பதிலை அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....