தேர்தல் ஆணைய தேசிய அடையாளச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் சச்சின் ...!

தேர்தல் ஆணைய தேசிய அடையாளச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் சச்சின் ...!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்காளர்களை அதிகரிக்க வைக்கும் வகையில் முக்கியப் பிரபலங்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் அறிவிப்பது வழக்கம். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் திரளான இளைஞர்களை வாக்களிக்க வைக்கும் வகையில் சச்சின் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நாளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு வாக்களிப்பு விழிப்புணர்வை சச்சின் மேற்கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க   | அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் - உச்சநீதிமன்றம்....!