மீண்டும் செயல்பட தொடங்கியது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம்...

காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் செயல்பட தொடங்கியது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம்...

 ஆப்கானிஸ்தானில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக, காபூலிலிருந்த அதிகாரிகளை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்தன. தற்போது அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்தநிலையில், காபூலில் உள்ள இந்திய தூதரகம் தகுந்த பாதுகாப்புடன், மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டதாகவும், அங்கு நிலவும் நிலை குறித்து தினசரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு  தகவல் வருவதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு வழக்கம்போல் சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு மீதமுள்ள இந்தியர்களும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.