பேஸ்புக்கில் ‘ஹாஹா’ இமோஜியை இனிமே பயன்படுத்தக்கூடாது... வங்க தேச மதகுரு சர்ச்சை கருத்து

பேஸ்புக்கில் ‘ஹாஹா’ இமோஜியை பயன்படுத்துவது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என வங்க தேச மதகுரு தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பேஸ்புக்கில் ‘ஹாஹா’ இமோஜியை இனிமே பயன்படுத்தக்கூடாது... வங்க தேச மதகுரு சர்ச்சை கருத்து

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வங்கதேசத்தில் அஹ்மதுல்லா என்ற இஸ்லாமிய மதகுரு ஒருவர் தொலைக்காட்சிகளில் மதம் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இது தொடர்பான வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதுண்டு.  பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் 30 லட்சத்திற்கும் அதிகமாமோனோர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பேஸ்புக்கில் பயன்படுத்தப்படும் இமோஜி தொடர்பான் வீடியோ ஒன்றை சமீபத்தில் இவர் பதிவேற்றியுள்ளது பெரும் சர்ச்சையை கிளக்கியுள்ளது.

அதாவது மக்களை கேலி செய்வதற்காக பேஸ்புக்கில் பதிவிடும் "ஹாஹா" என்ற இமோஜி இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது எனவும் மக்கள் தயவு செய்து இதனை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது வீடியோவுக்கு ஆதரவாக பலர் கருத்துக்களை வெளியிட்டு வரும் வேளையில்,  சிலர் ‘ஹாஹா என்ற இமோஜியையே பதிலாக பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com