ஆரம்பிச்சுட்டாயா...கொளுத்தும் வெயிலில் வெளியே சென்ற வாலிபர்... வெப்பசலனத்தால் சுருண்டு விழுந்து பலியான சோகம்!!

வெயிலின் தாக்கத்தால் வாலிபர் ஒருவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் மராட்டியத்தில் அரங்கேறியுள்ளது.
ஆரம்பிச்சுட்டாயா...கொளுத்தும் வெயிலில் வெளியே சென்ற வாலிபர்... வெப்பசலனத்தால் சுருண்டு விழுந்து பலியான சோகம்!!

கோடை வெயிலின் தாக்கம் அனேக பகுதிகளில் தொடங்கி விட்டதால் மக்கள் அனைவரும் வெளியே செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் கோடைக்காலம் தொடங்கி இருப்பதால் காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் வட மராட்டிய பகுதியான விதர்பா, மாரத்வாடா பகுதிகளில் வெப்பசலனம் அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் ஜல்காவை சேர்ந்த ஜித்தேந்திரா என்ற வாலிபர் நேற்று முன்தினம் பிற்பகலில் பண்ணையில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வழியில் திடீரென அவர் சுருண்டு விழுந்துள்ளார். இதனை கண்ட மற்ற விவசாயிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வெப்ப தாக்கத்தால் அவர் பலியானதாக டாக்டர் ஆஷிஷ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வானிலை ஆய்வின்படி, நேற்று முன்தினம் மட்டும் ஜல்காவ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 41.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்துள்ளது. இது இயல்பை விட 2.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளதாகவும், வருகிற நாட்களில் மராட்டியம் உள்பட நாட்டின் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com