இதை செய்தால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும்!

மூன்று கட்டங்களாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கு முடக்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இதை செய்தால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும்!

மூன்று கட்டங்களாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கு முடக்கப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. சமூக வலைத்தளங்கள் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், புதிய விதிகளுக்குட்பட்டு மே 15-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதிக்குள் வாட்ஸ்அப் பயனர்களின் இருபது லட்சம் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி உள்ளது.  

இதுபற்றி வாட்ஸ்அப் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், தவறுகள் நடைபெறும் முன்பாக தடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், ஒருவரின் கணக்கில் மூன்று கட்டங்களாக ஆராய்ந்து அதாவது, பதிவு செய்தல், தகவலை அனுப்புதல் மற்றும் அதற்கான எதிர்மறையான கருத்துக்களை பெறும்போது கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறும் பயனாளரின் கணக்கு முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களை ஆராய்ந்து மேற்கொள்ளும் முடிவுகள் தங்களது செயல்திறனை மேம்படுத்த வழிவகை செய்யும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com