பெண்களுக்கான கருக்கலைப்பு குறித்த உரிமை...! தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்...!

அனைத்து பெண்களும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பெண்களுக்கான கருக்கலைப்பு குறித்த உரிமை...! தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்...!

கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் அனைத்து பெண்களும் அதாவது, திருமணமான மற்றும்  திருமணமாகாத அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான கருக்கலைப்புக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிக்க ஒரு பெண்ணின் திருமண நிலை காரணமாக இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. மருத்துவக் கருத்தரிப்பு (எம்டிபி) வழக்கில் நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட், ஜே.பி. பார்த்திவாலா மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு வழங்கும் போது, கருக்கலைப்பைத் தேர்வுசெய்ய அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. மேலும் கர்ப்பத்தின் 24 வாரங்கள் வரை மருத்துவ கருவுறுதல் சட்டத்தின் படி திருமணமாகாத பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு எனவும் தெரிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com