அதானி விவகாரம்...தொடங்கிய 10 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்ட அவைகள்!

அதானி விவகாரம்...தொடங்கிய 10 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்ட அவைகள்!

அதானி குழும விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

இரு அவைகளும் ஒத்திவைப்பு :

நடப்பாட்டிற்கான நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டர்பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டிய அதானி குழுமம் தொடர்பாக, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஆனால் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லா, அவை உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். எனினும் கூச்சல் குழப்பம்  நீடித்ததால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல்  மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகளின்  அமளி நீடித்ததால்,  2.30 மணி வரை  மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி, டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலயத்திலுள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக கனிமொழி எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com