"ஆட்சியை கவிழ்க்க பாஜகவின் முயற்சி வீணானது" - ராஜஸ்தான் முதல்வர் கருத்து

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது :- 

"ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கு  சனிக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அசோக் கெலாட், ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற பாஜக கட்சியின் முயற்சி பலன் அளிக்க வில்லை", என்று தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com