வில் அம்பு...ஷிண்டேவுக்கா? தாக்கரேவுக்கா?

வில் அம்பு...ஷிண்டேவுக்கா? தாக்கரேவுக்கா?

உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை தலைமையாக கொண்ட சிவசேனாவின்  இரு அணிகளி  யார் அதிகாமன உறுப்பினர்கள் கொண்டு இருக்கின்றனர் என்பதை ஆவணங்களுடன் நிருபிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இரு தரப்பினருக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் இரு அணிகளும் தங்கள் தேர்தல் சின்னம் மீதான கோரிக்கை பதில்களை ஆதாரங்களுடன் தாக்கல் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

சேனா சின்னம்:

சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணியினர் சிவசேனாவின் வில்-அம்பு தேர்தல் சின்னத்தை அவர்களுக்கு ஒதுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தனர்.  தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968 இன் பத்தி 15 இன் படி இந்த தேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே அணி:

தேர்தல் ஆணையத்திடம்  ஷிண்டே அணியினர் அவர்களே உண்மையான சிவசேனா என்று முன்னரே தெரிவித்துள்ளனர்.  அதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மகாராஷ்டிர சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நர்வேகர் வழங்கிய அங்கீகாரத்தையும் ஆதாரம் காட்டியுள்ளனர்.

உத்தவ் தாக்கரே அணி:

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு முன்னதாகவே கடிதம் எழுதியிருந்தது.  அதில்,கட்சியின் பெயர் மற்றும் அதன் தேர்தல் சின்னம் மீதான உரிமை கோரல்களுக்கான பிரதிநிதித்துவங்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன் அவர்களின் கருத்தை கேட்குமாறு கேட்டுக்கொண்டது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்குமாறு மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், சின்னம் மீதான கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்குகள்:

மகாராஷ்டிர அரசியல் நெருக்கடியின் போது சிவசேனா மற்றும் அதன் அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தற்போது அரசியலமைப்பு சிக்கல்களை எழுப்பியுள்ளன.

யாருக்கு மக்கள் ஆதரவு?

இதற்கிடையில், மகாராஷ்டிராவில் உள்ள பல உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தல் முடிவில் சிவசேனாவின் எந்த பிரிவு மக்களின் ஆதரவைப் பெற போகிறது என தெரியும்.