டெல்லி தொழிற்சாலையில் சிறுவர்கள் சடலமாக கண்டெடுப்பு!

டெல்லி தொழிற்சாலையில் சிறுவர்கள் சடலமாக கண்டெடுப்பு!

டெல்லி: டெல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், 2 சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜாமியா நகரை சேர்ந்தவர் பல்வீர். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பாதுகாப்பு பணியாளராக வேலை செய்கிறார். பல்வீர்க்கு 5 மற்றும் 7 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

கடந்த 5ம் தேதி மதியம் 3 மணி அளவில், சிறுவர்கள் இரண்டு பேரும், மதிய உணவு சாப்பிட்டுவிட்டு விளையாட சென்றுள்ளார்கள். நெடு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியுள்ளனர். இது குறித்து, ஜாமியா நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலர்கள், வழக்கு பதிவு செய்து, சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறுவர்கள் இருவரும், பல்வீர் பணியாற்றி வரும் தொழிற்சாலையில் உள்ள ஒரு பழைய மரப்பெட்டியில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

விசாரணையில், சிறுவர்களின் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் , தவறுதலாக, பெட்டிக்குள் சென்று பூட்டிக்கொண்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com