காவல்துறை சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி...

காவல்துறையினரின் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான காவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
காவல்துறை சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி...
Published on
Updated on
1 min read

புதுச்சேரி | அரசு சார்பில் தலைக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு வந்து கடந்த ஒரு மாத காலமாக காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தலைக்கவச சோதனை செய்து வந்தனர்.

தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் விதித்து வந்த நிலையில், தற்போது பொதுமக்களுக்கு தலை கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்களின் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் காவர்கள் தலைகவசம் அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர். இதனை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக போக்குவரத்து காவலர்களுக்கு இலவசமாக தலைக்கவசத்தினை வழங்கினார்.

காரைக்கால் மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி காரைக்காலில் முக்கிய வீதிகள் வழியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பு காவலர்களும்  பங்கேற்றனர்.

தலைக்கவசம் இனி மாவட்ட முழுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ளுமாறு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவலர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார் தலை கவசம் அணியாமல் இருப்பதை யாரேனும் புகைப்படம் எடுத்து அனுப்பினால் சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com