இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடைவேன்: ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை...

இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடைவேன்: ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை...

உத்தரப் பிரதேசத்தில் ஜீயர்களில் ஒருவரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் இது குறித்து ஏஎன்ஐ செய்தி  நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் , இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி வரும் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன் என்றார்.

 மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த நிலையில் ஏற்கெனவே, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அவர் அதனை மேற்கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

 உத்தரப் பிரதேசம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் அதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் உ.பி.யைச் சேர்ந்த முக்கிய ஜீயர்களில் ஒருவரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com