இன்றே வெளியாகிறதா...? குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் முடிவு!

இன்றே வெளியாகிறதா...? குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் முடிவு!
Published on
Updated on
1 min read

குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

குடியரசு துணைத் தலைவர்:

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநரான ஜெகதீப் தன்கரும், எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு:

புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது.  விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குபதிவிற்கு இடையே, இந்திய பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தங்களது வாக்கினை செலுத்தினர். அத்துடன், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சக்கர நாற்காலியில் வந்து, தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தங்களது வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்து வந்தனர்.

வாக்குப்பதிவு நிறைவு:

புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணியளவில் தொடங்கியதையடுத்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் வாக்குப்பதிவானது மாலை 5 மணியுடன்  நிறைவடைந்தது.  

தேர்தல் முடிவு இன்றே வெளியாகுமா?:

நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து, இன்றே வாக்கு எண்ணிக்கையானது தொடங்கும் என்றும், இன்று இரவே தேர்தலில் வெற்றி பெற்றது  யார் என்பதும் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் யார் அடுத்த குடியரசு துணை தலைவர் ஆவார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com