ஒடிசா ரயில் விபத்து எதிரொலி; செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை!

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி; செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை!

ரயில்களை இயக்கம் பொழுது லோகோ பைலட்டுகள் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒடிசா ரயில் விபத்து நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பை அதிகரித்து, உறுதிப்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வகையில், முதற்கட்டமாக ரயில்களை இயக்கம் லோகோ பைலட்டுகள் செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பே, செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது, அவற்றை அணைத்து அருகில் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவ்வப்போது, சோதனைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்களின் இயக்கும் போது அவர்களின் கவணம் மற்றும் இயக்கம் திறன் கண்காணிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.