ட்ரோன் திருவிழாவான பாரத் மஹோட்சவ்-2022ஐ இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...!

ட்ரோன் திருவிழாவான பாரத் மஹோட்சவ்-2022ஐ இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...!

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் மஹோட்சவ்-2022ஐ பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இன்று காலை 10 மணிக்கு ட்ரோன் திருவிழாவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, கிசான் ட்ரோன் விமானிகளுடன் உரையாடுகிறார். பின்னர் திறந்தவெளி ட்ரோன் செயல் விளக்கங்களை காண உள்ளார். கண்காட்சி மையத்தில் 70க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்த உள்ளனர்.

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் ட்ரோன் நிறுவனங்கள் உட்பட1600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் ஆர்வமுள்ள அனைவரையும் நிகழ்ச்சியை பார்க்குமாறு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com