உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி... பொதுத் தேர்வுகளை ரத்து செய்த ஆந்திர அரசு...

உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி... பொதுத் தேர்வுகளை ரத்து செய்த ஆந்திர அரசு...

உச்சநீதிமன்ற எச்சரிக்கை எதிரொலியாக ஆந்திராவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து தற்போது வரை தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன. 
6 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துள்ளன. ஆந்திராவில் 12 பொதுத்தேர்வை நடத்துவது என திட்டமிட்டிருந்த நிலையில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வை நடத்தி அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால் கூட அதற்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடுவோம் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதன் எதிரொலியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. 
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com