தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்... அமித்ஷா தலைமையில் இன்று நடைபெறுகிறது...

திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தெற்கு மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம், இன்று நடைபெற உள்ளது.
தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்... அமித்ஷா தலைமையில் இன்று நடைபெறுகிறது...

திருப்பதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இன்று தெற்கு மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கும் இந்த கூட்டத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்கின்றன. 

தமிழகம் சார்பில் அமைச்சர் பொன்முடி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவின் வளர்ச்சி மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக, திருப்பதிக்கு அமித்ஷா சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து,  ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்றார். 

இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் பல்வேறு அதிகாரிகள் திருப்பதிக்கு சென்றுள்ளனர். இதனால் திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com