சமையல் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் - அரசாணை வெளியீடு!

சமையல் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் - அரசாணை வெளியீடு!

புதுச்சேரி மாநிலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்க ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளாதாக, புதுச்சேரி அரசு அரசானை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றிற்கு  ரூ.300 மானியம் வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். 

அதனைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டு துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப்பட்டது. இந்த கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்து, தலைமை செயலாளருக்கு அனுப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் ஒரு சிலிண்டருக்கு ரூ. 300ம்,  வறுமை கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் ரூ.150 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த அரசாணை, அரசிதழில் வெளியிட்டவுடன், உடனடியாக அமலுக்கு வரும் எனவும் இந்த மானியத்தொகை, அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிக்க || லேடி இன்ஸ்பெக்டரின் கேடி வேலை: ” 500 ரூபாய் நோட்டு கொடுத்தால் ₹ 1 கோடி தருவேன்”.