செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கடலில் வலைவீசும்போது மீன்களுக்கு பதிலாக அதிக அளவில் நெகிழி குப்பைகள் வலையில் சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதியில் அதிக அளவிலான மீனவ கிராமங்கள் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு மீன் பிடி தடைக்கால முடிந்து தற்பொழுது மீனவர்கள் கடலுக்கு சென்று வரும் நிலையில் மீனவர்களின் வலைகளில் அதிக அளவிலான நெகிழி மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் வலைகளில் சிக்குவதால் மீன்கள் இன்றி கரைகளுக்கு திரும்பினர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து தற்பொழுது மீன்கள் பிடிக்க செல்லும் நிலையில் நீரோட்டத்தின் அளவு அதிகமாக காணப்படுவதால் ஆற்றுப்பகுதிகளில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நெகிழி குப்பைகள் அதிக அளவில் கடல் அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கி வருவதால் மீனவர்கள் வலையில் சிக்கி மீனவர்கள் மீன்கள் இன்றி கரைகளுக்கு திரும்பி வருகின்றனர்.
சதுரங்கப்பட்டினம் கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் வலைகளில் சுமார் 150 முதல் 250 கிலோ எடை கொண்ட நெகிழி குப்பைகள் வலைகளில் மாட்டி அவற்றை முழுமையாக எடுக்க முடியாமல் வலைகளை அறுத்து கடற்கரைக்கு கொண்டு வந்து வீசி செல்கின்றனர்.
மீன்பிடித்தடை காலம் முடிந்து தற்பொழுது மீனவர்கள் கடலுக்கு சென்று வரும் நிலையில் தங்களின் வாழ்வாதாரம் பொதுமக்கள் பயன்படுத்துகின்ற நெகிழி குப்பைகள் கடற் பகுதியில் வந்து சேர்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | தீயணைப்புத் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு!