சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களா நீங்க.. அப்போ இதை முதல்ல படிங்க…  

சர்க்கரை நோயாளிகள் (நீரிழிவு நோய் / sakkarai noi / Diabetes in Tamil) எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தற்போது காணலாம்…  
சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களா நீங்க.. அப்போ இதை முதல்ல படிங்க…   

சர்க்கரை நோயாளிகள் (நீரிழிவு நோய் / sakkarai noi / Diabetes in Tamil) எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தற்போது காணலாம்…

 உடற்பயிற்சி

தினமும் போதுமான அளவிற்கு உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தசைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கிரகித்து தேவையான சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவு வேண்டாம்

அதிக அளவு கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்சுலின் செயல்பாடு மிக மோசமாகிவிடும். இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவு மிகவும் அதிக அளவு அதிகரித்துவிடும். அதனால் இந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. இனிப்பு வகைகள் சாப்பிட ஏற்றது இல்லை.

உடல் எடை

உடல் எடையை எப்பொழுதும் சீரான அளவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இது மிகவும் அவசியம். 

நார்ச்சத்து

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இது ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

தண்ணீர்

தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது உடலின் நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.. மேலும் அதிக அளவு சர்க்கரை சிறுநீர் வழியே வெளியேறி விடும்.

மன அழுத்தம் கூடாது

மன அழுத்தம் அதிகமாக இருக்கும்பொழுது கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும்.இந்த ஹார்மோன்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் அதிகப்படுத்தி விடும்.அதனால் எப்பொழுதும் நிலையான மனதோடு மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம்.

பரிசோதனை

ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

தூக்கம்

தேவையான அளவு தூக்கம் மிகவும் முக்கியம். சரியான தூக்கம் உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால் ஹார்மோன்கள் சீரற்ற அளவு சுரக்கத் தொடங்கும். இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியாது. அதனால்
தூக்கத்தை தவிர்க்க வேண்டாம்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com