சென்னையில் வானவில் பேரணி!

சென்னையில் வானவில் பேரணி!

LGBTQ மாதத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற வானவில் திருவிழா சுயமரியாதை பேரணியில் ஏராளமானோர் பல வண்ண ஆடைகள் அணிந்து பதாகைகளை ஏந்தி கலந்துகொண்டனர். 

LGBTIQA+ மக்கள் தங்கள் மாதமாக  கருதும் ஜூன் மாதத்தில் பிரமாண்ட பேரணியினை உலகெங்கும் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று (LGBTIQA+ Communities'  PRIDE March) எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பேரணியாக சென்றனர். 

குறிப்பாக சமூகத்தின் பார்வையில் ஆண் பெண் என்ற பாலினம் சிகை அலங்காரம் ஆகியவற்றை விடுத்து தம் உணர்வுகளுக்கு தகுந்தாற் போல பல வண்ண ஆடை அணிந்து சிகை அலங்காரம் செய்து பேரணியில் நடமாடி மகிழ்ந்தனர். 

ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் மட்டுமின்றி, அவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி பதாகைகள் ஏந்தினர்.

தங்கள் நலனை காக்கும் மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த அவர்கள், மேலும் தங்கள் இருப்பை உரிமையை நிலைநாட்ட அரசு பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

முக்கியமாக பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்து கொண்ட நிகழ்வானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com